29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

இந்திய சமுதாயத்துக்கான மித்ரா நிதி சூறையாடல் தொடர்பில் எஸ்பிஆர்எம் ஹலிமாவை ஏன் விசாரிக்கவில்லை

🔥 Views : 23
👁 Reading Now : 49

மித்ரா நிதி சூறையாடல் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எனப்படும் எஸ்பிஆர்எம் நடவடிக்கையைத் தொடங்கினாலும் ஆமைச்சர் டத்தோ ஹலிமா ஏன் விசாரிக்கப்படவில்லை என்று மலேசிய முன்னேற்றக் கட்சி எம்.ஏ.பி. தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். வேதமூர்த்தி கடன் வைத்ததாகவும் அதை அடைக்க 8 கோடியே 50 லட்சம் வெள்ளியைப் பயன்படுத்தியதாகவும் நாடாளுமன்றத்திலேயே ஹலிமா பொன்.வேதமூர்த்திமீது குற்றம் சுமத்தி இருந்தார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த வேதமூர்த்தி, இதை நாடாளுமன்றத்துக்கு வெளியே சொல்லும்படி ஹலிமாவுக்கு சவால் விட்டார். ஹலிமா தொடந்து மௌனம் காத்த நிலையில், பராவில்லை இரண்டு பேரும் சேர்ந்தே எஸ்.பி.ஆர்.எம்.-இல் புகார் செய்யலாம் என்றும் ஹலிமாவை அழைத்துப்பார்த்தார் பொன்.வேதமூர்த்தி. எதற்காக கடன்? 85 மில்லியன் வெள்ளியை யார் யாருக்கு அல்லது எங்கெங்கு கொடுத்து ஹலிமா கடனை அடைத்தார் ஹலிமா.? இந்திய சமுதாய ஏழை-எளிய மக்களுக்காக அரசாங்கம் கொடுத்த நிதியில் ஒரு வெள்ளி, இரு வெள்ளி அல்ல; 85 மில்லியன் வெள்ளியை கடனை அடைக்க செலவிட்டேன் என்று அதுவும் நாடாளுமன்றத்தில் சொன்ன ஹலிமா அதற்கான விளக்கத்தைக் கொடுக்காமல் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறார் என்று அவர் சாடினார். இத்தனைக்கும் அவர்மீது நேரடியாக ஒரு முன்னாள் அமைச்சரும் ஒரு கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தியே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் நேரடியாக புகார் கொடுத்தபின்னும் ஊழல் தடுப்பு ஆணையம் பின்வாங்குவது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles