31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பாலிங் நாடாளுமன்ற தொகுதியில் 1400 குடும்பத்தினருக்கு தீபாவளி அன்பளிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 56

கோல கெட்டில். பாலிங் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து 1400 இந்திய குடும்பத்தினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அப்துல் அஜிஸ் அப்துல் ரஹிம் அன்பளிப்புகளை வழங்கினார். கடந்த நான்கு நாள்களாக 22 வட்டாரங்களில் நடத்தப்பட்ட தீபாவளி அன்பளிப்பில் வட்டார இந்துக்கள் மனம் குளிரும் வகையில் இத்தீபாவளி அன்பளிப்பு மிகச் சிறப்பாக அமைந்ததாக பாலிங் சமூக சேவகர் செகு இராமசாமி பாராட்டினார். பல்கலைக்கழகம் செல்லும் வட்டார இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் உறுதிக்கடிதம் வழங்கியதாக பாலிங் தொகுதியின் புதிய தலைவர் எஸ்.செங்காளி குறிப்பிட்டார். கனவனை இழந்து வறிய நிலையில் உள்ள 4 குடும்பத்தினருக்கு வீட்டு வாடகை செலுத்த நடவடிக்கை, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாக செங்காளி கூறினார். பாலிங் வட்டாரத்தில் ஆலயங்கள் மறுசீரமைக்க மானியம், ஒரு ஆலயத்திற்கு நிலம் வாங்க மானியம், 5 இடுகாடுகள் மறுசீரமைப்பு, பாலிங் நாடாளுமன்ற அனைத்து 10 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை,கள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles