
ஷா ஆலமில் உள்ள ஸ்ரீ மூடா புதிய சந்தையில் அனைத்து வியாபாரிகளும் தற்போது உற்சாகத்துடன் வியாபாரம் செய்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்து பெருமக்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் கோழி மற்றும் ஆட்டிறைச்சி வாங்கி வருகிறார்கள். ஷா ஆலம் ஸ்ரீ மூடா சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு நன்கு அறிமுகமான சேகர் காய்கறி கடை களில் அனைத்து விதமான காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு காய்கறிகளின் விலை கட்டுப்பாட்டில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் வீட்டுக்கு தேவையான அனைத்து காய்கறிகள், பழங்கள், கோழி மற்றும் மீன்களை தமது கடையில் மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். தொடர்புக்கு சேகர் 012-3245294




