25.6 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

தீபாவளி குதூகலத்தில் புந்தோங் கச்சான் பூத்தே வியாபாரம் சூடு பிடிக்கிறது

🔥 Views : 31
👁 Reading Now : 36

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவ்வாண்டு கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பேரா மாநிலத்தில் புந்தோங் கச்சான் பூத்தே வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியள்ளது. கோவிட் -19 தொற்றின் தாக்கத்தால் அமலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஒரு முடிவுக்கு வந்தப் தீபாவளி கொண்டாட்டமும் களைகட்டத் தொடங்கி விட்டது. கச்சான் பூத்ததே விற்பனைக்கு பிரசித்திப் பெற்ற கம்போங் கச்சான் பூத்தே பகுதியில் மக்கள் நடமாட்டம் பெருகி விற்பனை சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வழக்கம் போலவே முறுக்கு,அச்சி முறுக்கு,இனிப்புப் பலகாரங்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்கி மக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர் என வியாபாரிகள் மனமகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles