31.4 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

மக்களை சந்திக்க முடியாது! பிரச்சாரம் செய்ய முடியாது! இது என்ன தேர்தலா டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காட்டம்

🔥 Views : 29
👁 Reading Now : 34

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள Sop விதிமுறைகள் குறித்து கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிகக் கடுமையாக சாடினார். மக்கள் சுகாதாரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் Sop விதிமுறைகளை மதிக்கிறோம். ஆனால் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை, மக்களை சந்திக்க அனுமதி இல்லை என்றால் இது என்ன தேர்தலா என்று அவர் மிகக் கடுமையாக சாடினார். லோரியில் ஏறிக்கொண்டு ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டு போக வேண்டியதுதான். இப்போது ஒருவர் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார். அவருக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் விருந்து நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு அபராதம் இல்லை. இது என்ன நாடு என்று அவர் மிக ஆவேசமாக கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles