
கடுமையான மழையால் சிலாங்கூர் மாநில ஸ்ரீ கெம்பாங்கான் தேசியப் பள்ளியில் வெள்ளம் ஏறியதால் சிக்கிக்கொண்ட 14 மாணவர்கள் மற்றும் 18 ஆசிரியர்கள் தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று இரவு 7.45 மணிக்கு அவசர தொலைபேசி அழைத்துக் கிடைத்ததும் அங்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் போலீசாரின் ஒத்துழைப்போடு மாணவர்களையும் ஆசிரியர்களையும் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



