33.9 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கிள்ளானில் 350 குடும்பங்களுக்கு அன்பளிப்புகள்

🔥 Views : 6
👁 Reading Now : 34
mala

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன், துணைத் தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமையில் கிள்ளான் வட்டத்தைச் சேர்ந்த 350 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. கிள்ளான் லிட்டில் இந்தியா சங்கத்தின் ஆதரவோடு நடைபெற்ற இந்த விழாவில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங், போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார். கடந்த வாரம் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் 300 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. இப்போது கிள்ளான் வட்டாரத்தில் 350 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் கிள்ளான் வட்டார தலைவருமான தமிழ்ச்செல்வம் தெரிவித்தார். வசதி குறைந்த மக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்ட வேளையில் உதவிகள் வழங்கிய டெக்ஸ்டைல்ஸ் உட்பட 15 நிறுவனங்களுக்கு தமிழ்ச்செல்வம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles