
ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய கோடிக்கணக்கான மித்ரா நிதி ஒதுக்கீடு மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தியுள்ளார். அரசியல் தொடர்புடைய அமைப்புகளுக்கு மித்ரா நிதி கொடுக்கப்பட்டது அவமானமாக இருக்கிறது. ஆகவே இந்த மித்ரா நிதி மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து விளையாட்டு காட்ட வேண்டாம் என்று ஜசெக தலைமை செயலாளருமான லிம் குவான் எங் கேட்டுக்கொண்டுள்ளார்.



