
நெகிரி செம்பிலான் மாநில தீபாவளி சந்தை இம்முறை மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளதால் பல தளர்வுகளால் மக்கள் அதிகளவில் தீபாவளி சந்தைக்கு வருகை புரிந்து புத்தாடைகளை வாங்கிச் செல்கிறார்கள். மேலும் இந்த தீபாவளி சந்தையில் நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனை மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஹஜி அமினுடின் பின் ஹருன் அவர்கள் நெகிரி செம்பிலான் மாநில தீபாவளி விற்பனை பெருவிழாவில் கலந்துக்கொண்டு பள்ளி தலைமையாசிரியர்களிடம் மாதிரி காசோலைகளை எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



