
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட பாஸ் கட்சி முடிவு செய்திருப்பது அந்தக் கட்சி தன்மானத்தை இழந்து விட்டதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சாடினார். பாஸ் கட்சி தனது தன்மானத்தை நிலைநிறுத்திக் கொள்ள சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும். சொந்த சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு கிடைக்காது என்பதால் பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட அது முடிவு செய்திருப்பதாக டாக்டர் ராமசாமி சுட்டிக்காட்டினார்.



