
இஸ்ரேல் ராணுவம் நடத்திக்கொண்டிருக்கும் ஏவுகணை தாக்குதலில் இன்று 8 சிறுவர்கள் உட்பட 33 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக மரணமடைந்தார். தினசரி இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை பாய்ச்சி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 சிறுவர்கள் உட்பட 190 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சண்டையை நிறுத்துவதற்கு ஐநா பாதுகாப்பு மன்றம் தனது கூட்டத்தை கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.
