29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

SOP மீறாதீர்கள் இந்திய உணவகங்களுக்கு நினைவுறுத்தல்!

🔥 Views : 8
👁 Reading Now : 29

நாட்டிலுள்ள இந்திய உணவகங்கள் அரசாங்கம் விதித்துள்ள எஸ்ஓபி விதிமுறையை பின்பற்றி நடக்கும்படி பிரிமாஸ் எனப்படும் இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சுரேஷ் கேட்டுக்கொண்டார். நாட்டில் நோய்த்தொற்று அதிகமாக இருப்பதால் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இருப்பினும் பொட்டலம் மூலம் உணவுகளை வாங்கிச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இந்த காலகட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்ஓபி விதிமுறைகளை அனைத்து உணவக உரிமையாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அரசாங்கத்துக்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நோய்தொற்று குறையும்போது ஒரு மேஜையில் இருவர் அமர்ந்து சாப்பிட அரசாங்கம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது பல உணவகங்கள் எஸ்ஒபி விதிமுறையை மீறி கொண்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படுகிறது. நெருக்கடியான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தொழிலாளர்களுக்கு சம்பளம் போட வேண்டும். கட்டட வாடகை பணத்தை செலுத்த வேண்டும். இந்நிலையில் அபராதம் செலுத்த நேரிட்டால் நிலைமை மேலும் மோசமாகும்.
ஆகவே மலேசியாவில் உள்ள இந்திய உணவக உணவகங்கள் எஸ்ஒபி விதிமுறையை பின்பற்றி அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படி சுரேஷ் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles