
இஸ்ரேல் ராணுவம் நடத்திக்கொண்டிருக்கும் மோசமான தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாலஸ்தீன மக்களுக்கு உதவுவது மனிதநேய அடிப்படையாக கொண்டது என்று இந்திய குரல் தலைவர் ராயுடு தெரிவித்தார்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு உதவ உலகத் தமிழர்கள் முன்வரவேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். மலேசிய இந்தியர்கள் சார்பில் ம இ கா உதவும் என்று அதன் தலைவர்கள் கூறியிருந்தனர்.
தமிழக மக்களுக்கு உதவுவதை காட்டிலும் இங்குள்ள தமிழர்களுக்கு உதவலாம் என்று ராயுடு கூறினார்.
இவரின் கருத்தை விமர்சனம் செய்திருக்கும் சில ம இ கா தலைவர்கள், டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம் பாலஸ்தீன மக்களுக்கு உதவ நிதி திரட்டியுள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கு அவர் உதவலாம். நாங்கள் தமிழக மக்களுக்கு உதவ கூடாதா என்று ம இ கா தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுபற்றி கருத்துரைத்த ராய்டு,
பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருப்பது விவகாரம் வேறு.தமிழக விவகாரம் வேறு. தமிழ்நாட்டில் பல நட்சத்திர நடிகர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் சம்பாதித்த அவர்கள் வாரி வழங்கினால் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற முடியும். ஆனால் பாலஸ்தீனம் மக்களுக்கு உதவுவது மனிதநேய அடிப்படையாகும் என்று ராய்டு பதிலடி கொடுத்தார்.
