
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என்று அம்னோ அறிவித்துள்ளதை தொடர்ந்து பெர்சத்து கட்சி தன் நிழலை கண்டு பயப்படுகிறது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
கடந்த தேர்தலில் ஜசெகவுடன் இணைந்து தேசிய முன்னணியை வீழ்த்தியதை மறக்க மாட்டோம்.
இப்போது மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் அம்னோவின் ஒத்துழைப்பு இல்லை என்று தெரிந்தவுடன் பெர்சத்து மிகவும் ஆடிப் போய் உள்ளது .
அம்னோவுடன் நேரடி மோதலை தவிர்க்க பாஸ் கட்சி இன்னமும் பேச்சுவார்த்தையில் உள்ளது என்று அவர் சொன்னார்.



