29.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மலேசிய இந்தியர்கள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்

🔥 Views : 6
👁 Reading Now : 42

மக்கள் நடமாட்டம் உத்தரவு தளர்த்தப் பட்டதால் மலேசிய இந்தியர்கள் நேற்று தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இல்லங்களில் sop விதிமுறைகளை பின்பற்றி உபசரிப்பை நடத்தினர்.
அந்த வகையில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தமது இல்லத்தில் நடத்தி உச்சரிப்பில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தம்பதியர், செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங், ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ. கணபதி ராவ் நடத்திய உபசரிப்பிலும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி, ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங், ஜசெக தலைவர் டான் கோக் வாய், சிலாங்கூர் மாநில அரசாங்க தலைமை செயலாளர் உட்பட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles