
மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளியில் பெரும்பகுதி இந்திய சமூகத்தின் அரசியல் கட்சிக்கு தொடர்புடைய தனிப்பட்ட நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நன்மை அடைந்துள்ளனர்.
ஆனால் இந்த நிதி உண்மையிலேயே தேவைப்படுவோருக்கு சென்றடையாமல் போனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்
மித்ரா நிதி ஒதுக்கீடு மோசடி தொடர்பில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்ரா நிதி பெற்ற நிறுவனங்கள் மீது தற்போது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



