31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மரண வாசலில் காத்திருக்கும் நாகேந்திரனுக்கு வெளியுறவு அமைச்சு உதவும்!

🔥 Views : 9
👁 Reading Now : 56

சிங்கப்பூரில் போதைப் பொருள் வழக்கு ஒன்றில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மலேசியரான நாகேந்திரன் என்பவரின் குடும்பத்துக்கு வெளியுறவு அமைச்சு தேவையான உதவிகளை வழங்குமென வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின்அப்துல்லா தெரிவித்தார் .2021 நவம்பர் 10 -ஆம் தேதி அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட இருப்பதால் இப்பிரச்சனைக்கு சுமுகமான முறையில் தீர்வு கண்டு உதவும் பொருட்டு சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தாம் நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளதாக சொன்னார். 42 .72 கிராம் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக கடந்த 2009 ஏப்ரல் 22 -ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு,2010 நவம்பர் 22 -ஆம் தேதி சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கடுமையான போராட்டம் நடத்தியும் 1.6.2020 -இல் நாகேந்திரனின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles