
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் வேட்பாளர்களைத் தேர்வுச் செய்வதில் மலாக்கா ஜசெக துணிச்சலான ஒரு முடிவெடுத்துள்ளது என்று கட்சியின் செயலாளர், அந்தோனி லோக் தெரிவித்தார். பெம்பான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பொருட்டு மிகவும் பாதுகாப்பானத் தமது தொகுதியை மாநில ஜசெக தலைவர், தேய் கோக் கியூ விட்டுக் கொடுத்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. புறநகர் பகுதியிலுள்ளச் சட்டமன்றத் தொகுதியான பெம்பானைத் தற்காப்பதில் தேய் கோக் கியூ கடுமையாகப் போராடி வருகிறார். கடந்த 14ஆவதுப பொதுத்தேர்தலில் முதன்முறையாக ஜசெக 8 சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றியது. ஒரு பெண் வேட்பாளர் உட்பட அனைத்து இனங்களும் இடம் பெற்றிருக்கும் வேட்பாளர்களைக் களமிறக்குவதில் ஜசெக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்று அவர் சொன்னார்.



