
போதைப் பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிச் சென்ற போதைப் பித்தனை பிடித்து கடுமையாக தாக்கி மரணம் ஏற்பட காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட மையத்தின் வார்டன் ஒருவருக்கு 7 நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கெடா சங்லூன் என்ற இடத்திலுள்ள மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிச்சென்ற 31 வயது ஆடவனை வெளியில் கண்டுபிடித்து கடுமையாக தாக்கியதால்,பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவன் உயிரிழந்தான். பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த அவன் கடந்த ஏப்ரல் மாதம் இந்த மையத்தில் சேர்க்கப்பட்டான்.



