
அண்ணாத்த படம் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதோடு பல ரஜினி ரசிகர்களே இது என்ன படமா இல்லை மெகா சீரியலா என்று கதறி வருகின்றனர். அதோடு தியேட்டரிலேயே பல ரசிகர்கள் தூங்கிவிட்டதாக பலரும் கூறி வருகின்றனர். ரஜினி நடிப்பில் அண்ணாத்த மிக மோசமான படமாக அமைந்துள்ளதாக ரசிகர்களே கூறி வருகின்றனர். ரஜினி மார்க்கெட் இத்தனை மோசமாக ஆகும் என்று ரஜினியே நினைத்திருக்க மாட்டார்.



