
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பினாங்கு பினாந்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜை சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஆதரவில்,சுற்று வட்டார பக்த பெருமக்களின் துணையுடன் புதுப்பொழிவு பெற்று விளங்கும் இந்த ஆலயத்தில் தீபத்திருநாளை முன்னிட்டு முதல் தீபாவளி சிறப்புப் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தீபாவளி சிறப்புப் பூஜையில் ஆலய தலைவர் சு.மணிவாசகம்,ஆலய ஒருங்கிணைப்பாளர் பாலன் நம்பியார்,ஆலய துணைத் தலைவர் குணரத்தினம் மற்றும் வட்டார பக்த பெருமக்கள் ஆகியோர் தீபாவளி சிறப்புப் பூஜையில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



