
சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் சிலாங்கூர் அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மேம்பாடு மையத் (சித்தம்) திட்டமும் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இந்த மையத்தின் மூலம் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மற்றும் உற்பத்தி வழிகாட்டல், மற்றும் வணிக உபகரண மானியங்கள் வழங்கப்படுகின்றன. அக்டோபர் வரை, இந்த திட்டத்தின் மூலம் கடந்த அக்டோபர் வரை 2,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பலன் பெற்றுள்ளனர். சமூகத்துடன் அணுக்கமான உறவை ஏற்படுத்தும் நோக்கில் இந்திய சமூகத் தலைவர்களின் எண்ணிக்கையை 48ல் இருந்து 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்



