
நாட்டில் இதுவரை 2 கோடியே 24 லட்சத்து 9 ஆயிரத்து 335 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 80 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான 21 லட்சத்து 97 ஆயிரத்து 961 இளையோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



