
சிலாங்கூர் மாநில ஓட்டப்பந்தய சங்கத்திற்கு டத்தோ எஸ் எம் முத்து சட்டபூர்வ தலைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் ஜாலில் உள்ள மலேசிய விளையாட்டு ஆணையம் இதை உறுதிபடுத்தி இருப்பதாக டத்தோ எஸ் எம் முத்து தெரிவித்தார். கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தனர். ஆனால் இந்தக் கூட்டம் செல்லுபடியாகாது. மேலும் என்னை நீக்கியதும் செல்லாது என்று மலேசிய விளையாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதியில் என் தலைமையில் நடக்கும் சிலாங்கூர் மாநில ஓட்டப்பந்தய சங்கத்தின் கூட்டமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக டத்தோ எஸ் எம் முத்து தெரிவித்தார்.



