27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுங்கள்! ஆன்லைன் மூலம் பிரச்சாரம் ஆரம்பம்

🔥 Views : 8
👁 Reading Now : 65

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியப் பிரஜை நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. வரும் நவம்பர் 10ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அனைத்துலக மனித உரிமை ஆணையம் நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை வலியுறுத்தும் வகையில் ஆன்லைன் மூலம் மிகப்பெரிய பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles