27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அமைச்சர்களுக்கு எதற்கு தோயோத்தா வெல்ஃபயர் கார்கள்

🔥 Views : 6
👁 Reading Now : 28
mala

நான்கு இருக்கைகள் கொண்ட காருக்கு பதிலாக 7 இருக்கைகள் கொண்ட சொகுசு காரை அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களாக மாற்றுவது மக்களின் பணத்தை வீணடிப்பதற்கு ஆகும் என்று கூட்டரசுப் பிரதேச பிகேஆரின் இளைஞர் பிரிவுத் தலைவரும் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் கடுமையாகச் சாடினார். புரோட்டோன் பெர்டானா காரிலிருந்து தோயோத்தா வெல்ஃபயர் ரக கார் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வாகனமாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிதி அமைச்சர், தெங்கு ஸாஃப்ருல் அஜிஸ் மக்களின் பணத்தை மட்டும் வீணடிக்கவில்லை, மாறாக பிரதமரின் அலுவலகத்தில் புதிய தளவாடங்களை வாங்கி மாற்றி அமைப்பதற்கு10 லட்சம் வெள்ளி செலவழிக்கப்பட்டதையும் அம்பலப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி ஸ்ரீ பெர்டானாவிலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மாற்றி அமைக்கப்பட்டதில் 3 கோடி வெள்ளி செலவழிப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது என்று பிரபாகரன் கடுமையான சாடினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles