
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னர் அணி தாவ மாட்டோம் என்று சத்திய பிரமாண வாக்குமூலத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அம்னோ துணை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் வலியுறுத்தினார். வெற்றி பெற்ற பின்னர் அணி தாவ மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து அணி தாவ மாட்டோம் என்று சத்திய பிரமாண த்தில் அனைத்து தேசிய முன்னணி வேட்பாளர்களும் கையெழுத்து போட வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



