
தீபாவளி பண்டிகையை இழிவு படுத்தி பேசிய வெளிநாட்டு பிரஜை ஒருவரை போலீஸார் கைது செய்திருப்பதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அயூப் கான் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை இழிவு படுத்தி பேசிய அந்நிய பிரஜை ஒருவரின் காணோலி சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போலீஸ் புகார் செய்யப்பட்டது. அது தொடர்பில் நவம்பர் 5ஆம் தேதி மூவாரில் சம்பந்தப்பட்ட அந்த அந்நிய பிரஜை கைது செய்யப்பட்டார். இவர் மலேசியாவில் கூடுதல் நாட்கள் தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு உதவும் வகையில் இவர் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக டத்தோ அயூப் கான் தெரிவித்தார்.
