28.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

கட்சி தாவியவர்களை மகாதீர் ஏற்றபோது ஜசெக வருத்தப்பட்டதா? -பிகேஆர்

🔥 Views : 12
👁 Reading Now : 52

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் சார்ந்திருந்த கட்சிக்கும் தேர்ந்தெடுக்க மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டு அணிதாவி நம்பிக்கைக் கூட்டணியில் இணைந்தபோது ஜசெக வருத்தம் அடைந்ததா என்ற கேள்வியை பிகேஆர் கட்சி முன்வைத்துள்ளது. மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டி இட இருக்கும் நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜசெக புறக்கணித்தது. அம்னோவில் இருந்து தாவிய சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது குறித்து, வருத்தம் அடைந்துள்ள ஜசெகப் பார்த்து, இதே அம்னோவில் இருந்து தாவி வந்த 13 எம்பிக்களை மகாதீர் பெர்சத்துக் கட்சியில் இணைத்துக் கொண்டபோது ஜசெக மகிழ்ச்சி அடையவில்லையா என்று மக்கள் நீதிக் கட்சி சார்பில் வினாத் தொடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles