
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் சுங்கை ரம்பாய் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கெஅடிலான் இளம் வேட்பாளர் பார்சானா ஹயானி போட்டிருக்கிறார். 21 வயதான இவர் இந்த தேர்தலில் போட்டியிடும் மிக இளம் வேட்பாளராக விளங்குகிறார். மாரா கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு பட்டதாரி மாணவியான இவர் மாநில கெஅடிலான் மகளிர் பிரிவு தலைவி யாக பதவி வகிக்கிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
