
3ஆவது தலைமுறைக்கான மைவி ரக கார் சீரமைக்கப்பட்டு சிப்போது முன்பதிவுக்காக வாய்ய்ப்பு வழங்கபடுவதாக பெரோடூவா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ஸைனால் அபிடின் அகமட் தெரிவித்தார். இந்த புதிய ரக மைவி மேம்படுத்தப்பட்டத் தொழில்நுட்பத்துடன், விவேகப் பாதுகாப்பு அம்சங்கள், மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனமும் கொண்டது. இச்சீரமைப்பில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்யும் அதே சமயம் மலேசியாவில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ரக காரை மிகப் புதிய தரத்தில் அறிமுகப்படுத்தி மிகச் சிறந்த மதிப்பில் வழங்க வேண்டும் என்றார்.



