
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் இளம் வேட்பாளர் பிரசாந்த் குமார் மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் பிரசாத் குமாருக்கு ஆதரவாக கெஅடிலான் தேசிய இளைஞர் பிரிவு களமிறங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி இருப்பதால் கெஅடிலான் தலைமைத்துவம் இவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.



