
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் காடேக் தொகுதியில் ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் போட்டியிடுகிறார். 2018 நடந்த தேர்தலில் காடேக்கில் வெற்றி பெற்ற சாமிநாதன் இம்முறை அதிக வாக்குகளில் வெற்றி பெற தொகுதி மக்கள் முழு ஆதரவு வழங்குவார்கள் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் தெரிவித்தார். காடேக்கில் சாமிநாதனை ஆதரித்து தற்போது மாண்புமிகு காமாட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மலாக்காவில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைக்க மாநில மக்கள் முழு ஆதரவு வழங்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.



