
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் தங்களின் விவரக்குறிப்பில் கல்வித் தகுதியில் ஏமாற்று வேலை செய்து விட்டதாக செய்திகள் சமூக வலைத் தளத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்வித் தகுதிக்கானச் சான்றிதழ்களைக் கொண்டிருக்கா விட்டாலும் பரவாயில்லை, மாறாக ஏமாற்றும் அளவுக்கு இருக்கக் கூடாது. இவர்கள் இன்னும் வெற்றி பெறாமலேயே ஏமாற்றி விட்டனர் என்று நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.



