
கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோத்தா பாரு வில் அபாயகரமாக வாகனம் ஓட்டியதாக பிரதமர் துறை துணை அமைச்சர் அமாட் மார்சூக்கியின் டிரைவர் முகமட் நஸ்ரி மீது இன்று கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய அவர் 4,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



