
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹரப்பானின் முதல்வர் வேட்பாளராக அட்லி அறிவிக்கப்பட்டுள்ளார். பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்து முன்னேறுவோம் என்ற தேர்தல் கொள்கை அறிக்கை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்று வெளியிடப்பட்டது. பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மலாக்கா மாநில முதல்வர் வேட்பாளராக அட்லி அறிவிக்கப்பட்டார். 2018 இல் மலாக்கா மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது 22 மாதங்கள் இவர் முதல்வராக இருந்து சிறந்த முறையில் பணியாற்றினார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். மலாக்கா மாநில முதல்வர் வேட்பாளருக்கு அட்லி மிகவும் தகுதியானவர் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்தார்.



