
சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் தற்போது அதிபர் மாளிகையில் நடக்கும் விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணித்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அவரது மகன் எஸ்.பி.சரண் இந்த உயரிய விருதை பெற்றுக் கொண்டார். பாடும் நிலா எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்தாலும் அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்னமும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.



