
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் ரிம் சட்டமன்ற தொகுதியில் மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாத் குமார் பிரகாசம் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைவர்கள், கவுன்சிலர்கள் தொண்டர்கள் பிரச்சாரத்தில் இறங்கினார். இளம் வேட்பாளராக விளங்கும் பிரசாத் குமார் வெற்றி பெற ரிம் தொகுதி மக்கள் வாக்களிக்கும் டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.



