26.8 C
Kuala Lumpur
Thursday, September 10, 2026

Vetri

வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு 21 லட்ச வெள்ளி ஒதுக்கீடு!

🔥 Views : 54
👁 Reading Now : 29

வறுமை ஒழிப்பு பெருந்திட்ட உதவி திட்டத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டில் 21 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார். கடந்த ஆகஸ்டு மாதம் வரை வர்த்தக உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 529 பேர் பயனடைந்துள்ளதாக அவர் சொன்னார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை இத்திட்டத்திற்கு 1 கோடியே 66 லட்சம் வெள்ளி செலவிடப்பட்ட வேளையில் இந்த நிதியுதவியின் வாயிலாக 5,035 வணிகர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles