32.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

உடல் பருமன் மற்றும் இருதயநோய் மலேசியர்களிடை அதிகரிப்பு

🔥 Views : 10
👁 Reading Now : 45

இருதய நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை நாட்டு மக்கள் அதிகம் எதிர்நோக்கி வருவதால் மலேசியா ஒரு ஆரோக்கியமான நாடு அல்ல என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு மலேசியர்கள் மத்தியில் மிகவும் குறைவாக உள்ளதாக அவர் சொன்னார். மலேசியா ஆரோக்கியமான நாடா? என்று என்னைக் கேட்டால், அமைச்சர் என்ற முறையில் இல்லை என்றுதான் கூறுவேன். உடல் பருமன் மற்றும் இருதய நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் மலேசியாவும் உள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றினால் மரணங்கள் ஏற்பட்டதற்கு அந்நோய்த் தொற்று கண்டவர்களில் பெரும்பாலோர் இத்தகைய கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles