
மலாக்கா மாநில தேர்தலில் எந்த கட்சியும் நிறைவான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெறும் சூழலில் இல்லை என்று டாருள் ஏசான் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரிட்சுவான் கூறினார். பிரச்சார கூட்டங்களை நடத்துவதற்கும் வாக்காளர்களை நேரில் சந்திப்பதற்கும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக இத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாது நிலையில் சிந்தனையாளர் அமைப்புகள் உள்ளதாக அவர் சொன்னார். எந்த கட்சிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்பதை இந்த வினாடி வரை கணிக்க முடியாத நிலை உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து இரு வாரங்களுக்குப் பின்னர் எந்த கட்சி முன்னணியில் உள்ளது என்பதை கணிக்க முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.



