
மலாக்காவில் தேர்தல் நடத்தப்படுவதைப் போல் ஜோகூர் மாநிலத்திலும் நடத்த வேண்டும் என்று அம்னோ மூத்தத் தலைவர், டான்ஸ்ரீ ஷாரிர் சாமாட் சவால் விட்டிருப்பது தீய நோக்கமானதாக மட்டுமின்றி நியாயமற்றதாகவும் உள்ளது என்று முன்னாள் பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். மலாக்காவில் ஒருசில அம்னோ தலைவர்கள் சொந்த அரசின் ஆதரவை மீட்டுக் கொண்டதைப் போல் நானும் செய்ய மாட்டேன். இதனால் மலாக்கா மாநில மக்கள் கோவிட் தொற்றின் ஆபத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பெர்சத்துவின் தலைவர் என்ற முறையில் ஜோகூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசைக் கவிழ்க்கும்படி நான் உத்தரவிட்டிருந்தால் அது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்றார் அவர்.



