
மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு விதிக்கப்பட்டக் கடுமையான எஸ்.ஒ.பி.யினால் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து பேசுவதில் தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக கெஅடிலானின் ரிம் சட்டமன்ற வேட்பாளர், பிரசாந்த் குமார் பிரகாசம், (வயது 27) வருத்ததுடன் தெரிவித்தார். வாக்காளர்களை சந்திக்க முடியவில்லை. இது எனக்கு பெரும் சிரமமாக உள்ளது என்று அவர் சொன்னார். ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் பிரசாத் குமார் பிரகாசம் வெற்றி பெற பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மலாக்காவில் பக்காத்தானின் 22 மாத ஆட்சியில் முன்னால் முதல்வர், அட்லி ஸாஹாரியின் சிறப்பு அதிகாரிகளில் ஒருவராக பிரசாத் குமார் பணியாற்றியிருக்கிறார்.



