
மலாக்கா தேர்தல் பிரசாரக் கால கட்டம் முழுவதும் கட்சியின் சின்னம் கொண்ட சட்டையை அணிவதில் யாருக்கும் தடை விதிக்கப்படாது என்று மாநில போலீஸ் தலைவர், டத்தோ அப்துல் மஜிட் முகமட் அலி உறுதியளித்தார். ஜசெகவின் தொண்டூழியர் ஒருவருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதில் ஏற்பட்ட அதிருப்தி பற்றி கூறிய போது, சம்பந்தப்பட்ட அந்நபர் பிரசார ஊர்வலம் மேற்கொண்டிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாறாகக்கட்சியின் சின்னம் கொண்ட சட்டையை அணிந்ததால் அல்ல. இது 1988 தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம், பிரசாரத்திற்காக ஊர்வலம் மேற்கொள்ளக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஒ.பி.யையும் மீறியிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றார்.



