28.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

நான் பட்டனை தட்டினால் எல்லாம் சரிந்து விடும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் எச்சரிக்கை்கை

🔥 Views : 17
👁 Reading Now : 21

நான் ஒரு பட்டனைத் தட்டினால் எல்லாம் சரிந்து விடும். பெர்சத்து யாருக்கும் பயப்படவில்லை. நான் பழிவாங்க நினைத்தால் ஒரு பட்டனைத் தட்டினால் போதும். எல்லாம் சரிந்துவிடும் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் எச்சரித்தார். மலாக்காவில் தேர்தல் நடத்தப்படுவதைப் போல் ஜோகூர் மாநிலத்திலும் நடத்த வேண்டும் என்று அம்னோ மூத்தத் தலைவர், டான்ஸ்ரீ ஷாரிர் சாமாட் சவால் விட்டிருப்பது முட்டாள்தனமானது. அவர் எனக்கு சவால் விடுக்கிறார். நான் பயப்படவில்லை. நான் ஒரு பட்டெனை தட்டினால் எல்லாம் கவிழ்ந்து விடும். மலாக்காவில் ஒருசில அம்னோ தலைவர்கள் சொந்த அரசின் ஆதரவை மீட்டுக் கொண்டதைப் போல் நான் செய்ய மாட்டேன். இதனால் மலாக்கா மாநில மக்கள் கோவிட் தொற்றின் ஆபத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பெர்சத்துவின் தலைவர் என்ற முறையில் ஜோகூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசைக் கவிழ்க்கும்படி நான் உத்தரவிட்டிருந்தால் அது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் எச்சரித்தார். ஆனால் நான் மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles