
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மலேசிய பிரஜை நாகேந்திரன் என்பவருக்கு சிங்கப்பூர் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் பிரதமர் lee hisien loong தெரிவித்தார். நாகேந்திரன் விவகாரத்தில் சிங்கப்பூர் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான விசாரணைக்கு அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா ஆகியோரிடம் சிங்கப்பூர் பிரதமரும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் இதனைத் தெரிவித்துள்ளார். தூக்குத் தண்டனைக் கைதி நாகேந்திரனுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் கருணை காட்ட வேண்டும் என்று மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



