24.6 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

நாட்டில் நடுநிலையான அரசியல் நிலைப்பாடு தொடர பக்கத்தான் ஹரப்பானை தேர்வு செய்யுங்கள்

🔥 Views : 46
👁 Reading Now : 24

நாட்டில் நடுநிலையான அரசியல் நிலைப்பாடு தொடர வேண்டுமானால் இந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிபெற வேண்டும். ஆதலால், மலாக்கா வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை உணர்ந்து வரும் 20-ஆம் தேதி வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கேசவன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். மத்தியில் கூட்டாக ஆட்சியை நடத்தும் தேசிய முன்னணியும் பெரிக்கத்தான் நேஷனலும் மலாக்கா மாநிலத் தேர்தலில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்கின்றன. இப்போது இவ்விரு கூட்டணிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் சார்பில் முதல்வர் வேட்பாளராக அட்லி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரின் தேர்வு மிகச் சிறந்தது என்பதால் மலாக்கா மாநில மக்கள் பக்கத்தான் ஹராப்பானை வெற்றிபெற செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles