29.2 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் இலவச கோவிட் 19 பரிசோதனை!

🔥 Views : 26
👁 Reading Now : 46

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
நாளை 19ஆம் தேதி சுங்கை துவா தொகுதியில் உள்ள டேவான் ஸ்ரீ சியாந்தானிலும் கோம்பாக் செத்தியா தொகுதியில் உள்ள டேவான் பெரிங்கினிலும் இந்த இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு கூறியது.

வரும் 20ஆம் தேதி ரவாங் தொகுதியின் 17ஆவது மைலிலும் தாமான் டெம்ப்ளர், டேவான் சரோஜா கம்போங் பெண்டஹாராவிலும் பரிசோதனை நடத்தப்படும். 21ஆம் தேதி குவாங் தொகுதியிலுள்ள டேவான் செர்பகுணா குவாங்கில் இந்த இயக்கத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
22ஆம் தேதி ஸ்ரீ செர்டாங் தொகுயின் பியு 7 மண்டபத்திலும் கின்ராரா தொகுதியின் சமூக மண்டபத்திலும் 23ஆம் தேதி சுபாங் ஜெயா தொகுதியின் யுஎஸ்ஜே 1 லாமான் சுக்கானிலும் ஸ்ரீ செத்தியா தொகுதியின் எம்.பி.பி.ஜே மண்டபத்திலும் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles