
கெடா மாநிலத்தில் நான்கு இலக்க எண்கள் ரத்து செய்யவும் மது விற்பனையை கட்டுப்படுத்தவும் கெடா மாநில அரசின் நடவடிக்கையைப் பினாங்குத் துணை முதல்வர், டாக்டர் பி.ராமசாமி கடுமையாகச் சாடினார். இந்நடவடிக்கை உண்மையில் இந்தியர்கள், சீனர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வத்து அவர்களின் உரிமைகளை நிராகரிப்பதற்கே ஆகும். கெடா மாநிலத்தில் மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாரபட்சமாக இருக்கிறது என்று அவர் வன்மையாக சாடியுள்ளார்.



