
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் ஆதரித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் களமிறங்கி தீவிர பிரச்சாரம் செய்தார். சாமிநாதன் மிகச்சிறந்த சேவையாளர். தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார். சாமிநாதன் உட்பட அனைத்து பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் வெற்றி பெற வாக்களிக்கும்படி மலாக்கா மாநில மக்களை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

பக்கத்தான் ஹரப்பான் சார்பில் முதல்வர் வேட்பாளராக அட்லி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்பு மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி செய்தபோது மக்களுக்கு பெருமளவில் உதவியது. இந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அமைக்க அழைப்பு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.



